Designed by Iniyas LTD
மாதகலில் தாம் துப்பாக்கி பிரயோகம் நடத்தவில்லை -பொலிஸார் மறுப்பு..
நேற்று (வியாழக்கிழமை) மாலை யாழ். மாதகலில் பொலிஸாரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு, கஞ்சா போதைப்பொருள் வியாபரி ஒருவர் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தாம் துப்பாக்கி பிரயோகம் எதுவும் மேற்கொள்ளவில்லை என பொலிஸார் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாதகல் பகுதியில் கஞ்சா போதைப்பொருள் வியாபாரியை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது, சந்தேகநபர் அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்ட நிலையில் பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த நபரை பொலிஸார் கைது செய்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் அதனை மறுத்துள்ள பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சித்தங்கேணி பகுதியில் 7.2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவரை கைது செய்ததாக தெரிவித்துள்ளனர்.