தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மே 1 திகதியில் தொழிலாளர் தினத்தை கொண்டாட உள்ளது சோசலிச மக்கள் முன்னணி

மே 1 திகதியில் தொழிலாளர் தினத்தை தாம் கொண்டாட இருப்பதாக   சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

இதனை முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை  கூறியுள்ளார்.

பௌத்த மத நிகழ்வுகளை முன்னிட்டு சர்வதேச தொழிலாளர் தினத்தை மே மாதம் 7ம் திகதி அனுஷ்டிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு  அன்றைய  தினத்தை அரச விடுமுறையாகவும் பிரகடனப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில்  மே மாதம் முதலாம் திகதியே சர்வதேச தொழிலாளர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான தயார்ப்படுத்தல்களை  தாம் மேற்கொண்டிருப்பதாக வாசுதேவநாணயக்கார தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...