தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழில் ஒரே நேரத்தில் 14 பள்ளிவாசல்களில் தேடுதல் நடவடிக்கை..

யாழ் நகரில் அமைந்துள்ள தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பினரின் பள்ளிவாசல் உட்பட 14 பள்ளிவாசல்கள் பாதுகாப்பு தரப்பினரால் ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களினால் நாடு முழுவதும் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் மீண்டும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற அச்சநிலை உருவாகியுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணம் சுண்டுக்குழி மகளீர் கல்லூரிக்கு தீவிரவாத இயக்கத்தின் பெயரில் துண்டு பிரசுரம் ஊடாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகள்,முக்கிய இடங்களிற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே வெடி பொருட்கள் மற்றும் மர்ம பொருட்கள் மீட்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இன்று யாழ் நகரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களும் ஒரே நேரத்தில் சோதனையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...