தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் அமைச்சர் ரிசாத் பதியூதீன்…

ஆசியாவின் முதல் பத்து கோடீஸ்வரர்களில் ஒருவராக அமைச்சர் ரிசாத் பதியூதீன் வந்துள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் நந்தன தேரர் தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சு பதவியை தவறாக பயன்படுத்தி ,பயங்கரவாத குழுக்களுக்கு பாதுகாப்பு வழங்கி பாரிய சொத்துக்களை
ரிசாத் பதியூதீன் பெற்றுள்ளதாகவும் தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சாதாரண பை ஒன்றில் ஆடை எடுத்து கொண்டு கொழும்பு வந்த ரிசாத் பதியூதின், இவ்வாறு மிகப் பெரிய பணக்காரனாக மாறியது எப்படி? எனவும் தேரர் கேள்வியெழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் உரிய தரப்பினரிடம் முறைப்பாடு செய்த போதிலும் இதுவரை எந்தவித விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை என தேரர் கூறியுள்ளார்.

கலகொடஅத்தே ஞானசார தேரர்மீது நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கில் ஆஜராகுவதற்காக சென்ற போதே ஊடகவியலாளர்களிடம் நந்தன தேரர் இதனை தெரிவித்துள்ளமை குறீப்பிடத்தக்கது.

Comments
Loading...