Designed by Iniyas LTD
வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக பெற்றுக்கொள்கின்றது – பொன் செல்வராசா
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரசாங்கம் உரிய கரிசனை காட்டத் தவறியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை அரசாங்கம் பலவந்தமாக பெற்றுக் கொண்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமை நிலைநாட்டப்படுவதனை எதிர்நோக்க முடியுமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நல்லாட்சி நிலவவில்லை எனவும், சட்டத்தின் அதிகாரம் மலினப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் அரசாங்கம் ஆர்வம் காட்டுவதில்லை எனவும், அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு தமக்குக் காணப்படுவதாகவும் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பல்வேறு வழிகளில் தமிழ் மக்கள் மீது நெருக்குதல்களை பிரயோகித்து வருவதாகவும் இதனால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.