தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வீட்டின் மேற்கூரை விழுந்தபோதும் காரில் சென்றவர் உயிர் தப்பிய அதிசயம்.. ஜேர்மனியல் சம்பவம்..

ஜெர்மனியில் திடீரென வீசிய சூறாவளிக் காற்றில் வீட்டின் மேற்கூரை விழுந்ததில் காரில் சென்றவர்கள் உயிர் தப்பியுள்ளனர்.

எபர்ஹார்ட் என்ற இடத்தில் நேற்று திடீரென சூறைக்காற்று வீசியது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றின் வேகத்தில் ஆங்காங்கே வீடுகளின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன.

இந்நிலையில் அலுவலகங்கள் நிறைந்த அடுக்கு மாடியின் மேற்கூரை காற்றில் பறந்து விழுந்தது.

இதனைக் கண்ட சாலையில் சென்ற கார் ஓட்டுநர் தனது காரை நிறுத்தியபோது , மற்றொரு மிகப்பெரிய கூரை காரின் மீது விழுந்துள்ளது.

எனினும் கார் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளதாக தெரிவிக்கப்ப்டுகின்றது.

Comments
Loading...