Designed by Iniyas LTD
30 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கோலாவை தாக்கிய மஞ்சள் காய்ச்சல்
தென் ஆப்பிரிக்க நாடான அங்கோலாவில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய மஞ்சள் காய்ச்சல் காரணமாக 50-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 
இந்த காய்ச்சலால் மொத்தம் 241 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதையடுத்து உடனடியாக 4 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடுமையான தலைவலியும், வாந்தி, தலை சுற்றல் போன்றவை இந்த காய்ச்சலின் அறிகுறிகளாகும். ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு வகை கொசுக்கள் மூலமே இந்த நோயைப் பரப்பும் வைரஸ் பரவுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நோய் பாதித்தால் சிலருக்கு உடலில் உள்ள பல உறுப்புக்கள் செயலிழந்து மரணம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.