தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐபிஎல்லில் விராட் கோலியை இத்தனை ஆண்டுகாலம் கேப்டனாக வைத்திருப்பதற்கு அவர் நன்றி சொல்லவேண்டும் – முன்னாள் வீரர்..

ஐபிஎல்லில் விராட் கோலியை இத்தனை ஆண்டுகாலம் கேப்டனாக வைத்திருப்பதற்கு ஆர்சிபி அணியிடம் அவர் நன்றி சொல்லவேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

டிவி நிகழ்ச்சியொன்றில் விராட் கோலி குறித்து பேசிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதேவேளை  தோனி மற்றும் ரோகித் சர்மாவுடன் ஒப்பிடுகையில், ஐபிஎல்லில் கோலி ஒரு சாதுர்யமான கேப்டனாக தனக்குப்படவில்லை எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

மேலும்  கோலி பயணிக்கவேண்டிய தூரம் இன்னும் நிறைய இருப்பதாகவும், ஒருமுறைகூட  அவர் கோப்பையை வெல்லாதபோதும், அவரை தொடர்ந்து கேப்டனாகவே வைத்துள்ளதற்காக ஆர்சிபி அணிக்கு, கோலி நன்றி சொல்லவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...