தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் படுகாயம்..

யாழ் முகமாலையில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரு பெண்கள் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று(17) காலை இடம்பெற்றுள்ளது.

இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்த யாழ்.முகமாலைப் பகுதியில் ஊழியர்கள் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , எதிர்பாராத விதமாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்துச் சிதறியுள்ளது.

குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தயாரான குணேந்திரன் ரேணுகா(வயது-25) எனும் இளம் குடும்பப் பெண்மணி படுகாயமடைந்துள்ள நிலையில், அவருக்கு அருகில் நின்றிருந்த மற்றொரு பெண்ணும் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் தற்பொழுது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...