Designed by Iniyas LTD
பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச்செல்லமுடியாது – ஐ.நா. பொதுச்செயலாளர்
பொறுப்புக்கூறும் கடப்பாட்டிலிருந்து இலங்கை ஒருபோதும் நழுவிச்செல்லமுடியாது என்றும், சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகள் உரிய வகையில் நிறைவேற்றப்படவேண்டும் எனவும், ஐ.நா. பொதுச்செயலாளர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
நிவ்யோர்க்கில் நடைபெறும் ஐ.நாவின் சர்வதேச மாநாடொன்றில் பங்கேற்க சென்றுள்ள நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுக்கும், ஐ.நா. செயலருக்குமிடையில் நேற்று முன்தினம் சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பின்போதே ஐ.நா. செயலர் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை மக்களின் நிலையான அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க நிகழ்ச்சி நிரலுக்கு தொடர்ந்தும் உதவுவதில் ஐ.நா அர்ப்பணிப்புடன் இருக்கின்றதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி அமைதியான முனையில் தீர்க்கப்பட்டமை குறித்தும் ஐ.நா பொதுச்செயலர் திருப்தி வெளியிட்டுள்ளதாகவும் குரிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த சந்திப்பின்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.