தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மன்னாரில் அந்தோனியார் திருச்சொரூபம் இனந்தெரியாத விசமிகளினால் உடைப்பு…

மன்னார் – வில்பத்து சரணாலயத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் உள்ள அந்தோனியார் திருச்சொரூபம் இனந்தெரியாத விசமிகளினால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை சிலாபம் மறைமாவட்டத்தின் கீழ் அமைந்துள்ள இந்த தேவாலயத்தில் ஒவ்வொரு வருடமும் புனித அந்தோனியாரின் திருவிழாவை சிங்கள, தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சிறப்பாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...