தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மக்களை இலக்கு வைத்து மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதிகளை அளித்துள்ளார் – சர்வானந்தா

வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ள சூழ்நிலையில், பொருளாதார ரீதியில் நலிவான நிலையில் உள்ள மக்களை இலக்கு வைத்து வரவுசெலவுத் திட்டத்தில் மகிந்த ராஜபக்ஷ வாக்குறுதிகளை அளித்துள்ளதாக பொருளாதார வல்லுநர் முத்துக் கிருஷ்ணன் சர்வானந்தா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதார சூழலுடன் ஒப்புநோக்குகின்றபோது, இம்முறை வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை அரசாங்கத்தால் முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகமே என்றும் அவர் கூறினார்.Muttukrishna-Saravananthan

வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்தவொரு சிறப்புத் திட்டங்களையும் அரசு அறிவிக்காமல் விட்டமையின் பின்னணியில் அரசியல் காரணங்களே இருப்பதாகவும் சர்வானந்தா தெரிவித்தார்.

Comments
Loading...