தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அரசியல் யாப்பு உருவாக்கம் இரகசியமானதல்ல!

20ed3039-093e-4b65-aff9-880f5a956e69-bestSizeAvailableபுதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இரகசியமானதல்ல என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட  இணைப்பாளர்கள் மற்றும் தலைவர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து சிந்திக்கவேண்டுமே தவிர தனிப்பட்டவர்களின் எதிர்காலம் குறித்து அல்ல. தற்போது நாட்டின் எதிர்காலம் கருதி அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான இரகசிய முன்னெடுப்புக்களும் இல்லை என்று ஸ்ரீலங்கா ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...