Designed by Iniyas LTD
கிளிநொச்சியில் இரண்டு சடலங்கள் மீட்பு!
கிளிநொச்சி கனகபுரத்திலுள்ள கிணற்றில் இருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்குறித்த பகுதியைச் சேர்ந்த பொன்னம்பலநாதன் சிவகரன் (வயது 29) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டவராவார். குறித்த சடலம் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி டாக்டர் க.திருலோகமூர்த்தி மரண விசாரணையை மேற்கொண்ட பின்னர் பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
குறித்த இளைஞன் கடந்த ஞாயிற்றுக் கிழமை காணாமல் போயுள்ளதாக உறவினர்களால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்திக்கு அருகாமையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி இரத்தினபுரம் கிருஷ்ணர் கோவிலடிப் பகுதியைச் சேர்ந்த முனியாண்டி குமாரசாமி (வயது 52) எனும் ஐந்து பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலம் உறவினர்களால் அடையாளங்காணப்பட்டதையடுத்து கிளிநொச்சி மரண விசாரணை அதிகாரி மரண விசாரணையை மேற்கொண்டதையடுத்து பிரேத பரிசோத-னைக்கு உத்தரவிட்டுள்ளமை குறிப்-பி-டத்தக்கது.