Designed by Iniyas LTD
தென் மாகாணத்தில் விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது
தென் மாகாணத்தில் வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தகவலை தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராஜபுத்ர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்ட ஆரம்ப பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை , சீரற்ற காலநிலை காரணமாக கம்பஹா மாவட்டத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் இன்று மீள ஆரம்பிக்கவுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய தெரிவித்துள்ளார்.
