தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்று 500 ஆவது நாளை எட்டியுள்ள கேப்பாபுலவு மக்களது நிலமீட்பு  போராட்டம் .

ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சுபீகரித்து வைத்துள்ள  தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபிலவு மக்கள் போராட்டத்தினை  ஆரம்பித்திருந்தார்கள்.

இந்த நிலையில் அவர்களது நிலமீட்பு போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில்  இன்று  500 ஆவது நாளை எட்டுகிறது .

தமது பூர்விக காணிகளை முழுமையாக  விடுவிக்கும் வரை தமது போராட்டம் தொடருமென தெரிவித்து இன்றும் கேப்பாபுலவு மக்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை தமது 500 ஆவது நாள் பூர்த்தியை ஒட்டி நாளை (14) ம் திகதி காலை பத்துமணிக்கு மக்கள் பாரிய போராட்டம் ஒன்றை நிகழ்த்தவுள்ளதோடு போராட்டத்துக்கு அனைவரது ஆதரவினையும் கோரியுள்ளமை   குறிப்பிடத்தக்கது.  

Comments
Loading...