Designed by Iniyas LTD
பரந்தன் ரயில் தண்டாவாளம் அருகில் தமிழ் வாலிபன் மர்ம கொலை? அதிர்ச்சியில் மக்கள் !
பரந்தன் இரயில் தண்டவாளம் அருகில் இளைஞனின் சடலம் கண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று காலையில் பரந்தன் சந்திக்கும் கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கும் இடையில் இரயில் தண்டவாளம் அருகில் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞனின் சடலம் பரந்தனில் உள்ள பிரபல சாராயக்கடை ஒன்றுக்கு பக்கத்தில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இந்த சாராயக்கடை ஒரு விடுதியாகவும் வன்னியில் உள்ள பெரும்பாலான மக்களை சீரழிக்கும் செயற்பாடுகளில் இந்த கடையின் உரிமையாளர் ஈடுபட்டு வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது.
குறித்த சாராயக்கடைக்கு அண்மையில் இந்த சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த இளைஞன் இரயிலில் அடிபட்டு இறந்ததாக சிலர் கூறுகின்றனர். சிலர் இரயிலில் இருந்து குதித்து இறந்ததாக கூறுகின்றனர். சிலர் தவறுதலான விபத்து என்றும் கூறுகின்றனர். எது எப்படி நடந்தாலும் இரயிலில் அடிபட்ட இளைஞனுக்கு உடம்பில் எப்படி காயம்வராமல் போகலாம்? தலையில் மட்டுமே குறித்த இளைஞனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. வேறு இடங்களில் காயம் இல்லை, இரயிலில் அடிபட்ட இளைஞனுக்கு வேறு இடத்தில் காயம் வராமல் போகுமா? இரயிலில் இருந்து குதித்திருந்தால் குறிப்பிட்ட தூரம் தூக்கி வீசபட்டிருப்பார் அப்படி வீசபட்டிருந்தால் அந்த உடலில் எப்படி தலையில் மட்டும் காயம் ஏற்படும் ?
எனவே மேல் உள்ள விடயத்தை நோக்கும்போது குறித்த சாராய கடையில் மது அருந்தி விட்டு மது தலைக்கேறியவுடன் குறித்த இளைஞனை கொலை செய்து விட்டு தண்டவாளத்துக்கு அருகில் வீசியுள்ளார்கள். என்றே மக்கள் தெரிவிக்கின்றனர், வன்னயில் பெரும்பாலும் இளைஞர்களை சீரழிக்கின்ற சாராயக்கடையாக பரந்தன் சாராயக்கடை உள்ளது.
ஆகவே பொருத்தமான அதிகாரிகள் குறித்த விடயத்தில் தலையிட்டு குறித்த சாராயக்கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அல்லது குறித்த கடை இளைஞர்களால் கட்டாயமாக அகற்றப்பட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
மேலதிக விபரங்கள் கிடைத்தவுடன் இவ் இணையத்தில் வெளியாகும் .