தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பலாலி விமான நிலைய அபிவிருத்தி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தை, பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளதாக இந்தியாவின் விமான நிலைய அதிகார சபை, அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகார சபைக்கும், இந்திய வெளிவிவகார அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தம்  ஒன்று அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.
இதற்கமைய, பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை இந்திய விமான நிலைய அதிகாரசபை  தயாரிக்கும்.

உடன்படிக்கையில், இந்திய விமான நிலைய அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அனில் குப்தாவும்,

இந்திய வெளிவிவகார அமைச்சின் வங்காள விரிகுடா நாடுகளுக்கான இணைச் செயலர் சஞ்சய் பாண்டாவும்  கையெழுத்திட்டுள்ளனர்.

இதுதொடர்பாக இந்திய விமான நிலைய அதிகாரசபை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு ஒன்றில், விமான நிலைய அபிவிருத்தி மற்றும் செயற்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான தமது ஆற்றலும்,

நிபுணத்துவமும், உலகளவில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்றும் தாம  எதிர்பார்ப்பதாக இந்திய விமான நிலைய அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...