Designed by Iniyas LTD
குடியிருப்பில் மலைச் சிங்கத்தை வளர்க்கும் தம்பதி
ரஷ்யாவில் ப்யூமா (PUMA) எனப்படும் மலைச் சிங்கத்தை தம்பதியினர் தமது வீடில் வளர்த்துவருகின்றனர்.

மாஸ்கோவைச் சேர்ந்த செர்ஜி மற்றும் அவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள விலங்கியல் பூங்காவில் ப்யூமாவைத் தத்தெடுத்துள்ளனர்.
2 வயதான அந்த மலைச் சிங்கத்திற்கு இர்மா என்று பெயரிட்டுள்ள அவர்கள், அதனை தாங்கள் வசிக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பில் வளர்த்து வருகின்றனர்.
இர்மா எவ்வித பிரச்சனையும் இல்லாமல் விளையாடி வந்தாலும், அதனுடன் தாம் எச்சரிக்கை உணர்வுடனே பழகி வருவதாக செர்ஜி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்