தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கோலியின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் உதவி – ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்

விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் ஒருவர்தான்  தனக்கு உதவியாக இருந்ததாக ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா  தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய வீரர் ஸம்பாவிடம் எல்.பி.டபுள்யூ முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

இந்நிலையில் ,  இந்த விக்கெட் குறித்து விளக்கம் அளித்துள்ள ஸம்பா, இந்திய அணியின்முன்னாள் வீரரும் ஆஸ்திரேலிய அணிக்கு பயிற்சி ஆலோசகராக இருந்தவருமான ஸ்ரீதரன் ஸ்ரீராமிடம் தான்பந்துவீச்சு பயிற்சி பெற்றதாக தெரிவித்துள்ளார்.

மேலும், பந்துவீச்சில் அவர் கற்றுக்கொடுத்த புதிய நுணுக்கங்கள்தான் கோலியை அவுட் ஆக்க மிகவும் உதவிகரமாக இருந்ததாகவும் ஸம்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...