தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

சந்திரிக்கா மீதான தாக்குதல் வழக்கு : குற்றவாளிகளுக்கு 300 ஆண்டுகள் சிறைத்தண்டனை

Chandrikaஇலங்கை முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க மீதான தற்கொலைப்படை தாக்குதல் வழக்கில் இருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 1999ஆம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் சந்திரிகாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர், தனது ஒரு கண் பார்வையை இழந்தார்.

 இந்த வழக்கை விசாரித்த கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி பத்மினி, தாக்குதலில் தொடர்புடைய குற்றச்சாட்டில் வேலாயுதன் வரதராஜா என்பவருக்கு 290 ஆண்டுகளும், சந்திரா ஐயர் என்பவருக்கு 300 ஆண்டுகளும் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

Comments
Loading...