தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருமலையில் ஆர்.பீ.ஜி உந்துகணை மீட்பு!

RPG-7_detachedதிருகோணமலை மாவட்டத்திலுள்ள கோமரங்கடவெளைக்கும் – குச்சவெளிக்கும் இடைப்பட்ட காட்டுப் பகுதியில் இன்று திங்கட்கிழமை (22) பிற்பகல் 02 மணியளவில் ஆர்.பீ.ஜி  உந்துகணை  ஒன்றை உப்புவெளி பொலிஸார் மீட்டுள்ளனர்.

காட்டுப் பகுதிக்குள் தேன் எடுப்பதற்காகச் சென்ற நபரொருவர் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி அழைப்பின் மூலம் உந்துகணை இருக்கும் தகவலைத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், ஆயுதத்தினை மீட்டுள்ளனர்.

ஆர்.பீ.ஜி உந்துகணை, தற்பொழுது உப்புவெளி பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...