Designed by Iniyas LTD
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடசாலைகள் இன்று ஆரம்பம்..


கடந்த 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து காணப்படுகின்ற அச்ச சூழல் காரணமாக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படாது இருந்தது இந்நிலையில் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடசாலைகல் இன்றும் தரம்-5 க்கு உட்ப்படட பாடசாலைகள் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்திருந்தது
அதன் அடிப்படையிலே நேற்றைய தினம் தரம் 6 தொடக்கம் 13 வரையான பாடசாலைகள் அனைத்தும் ராணுவம் போலீசார் பெற்றோர் அதிபர் ஆசிரியர்கள் இணைந்து சோதனையிட்டு இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
இன்று காலையில் பாடசாலைகளில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு குழுக்களோடு பொலிஸார் இராணுவத்தினர் இணைந்து பாடசாலைக்கு வருகைதந்த பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்களுடைய பாடசாலைகள் பைகள் அனைத்தும் பரிசோதனை செய்யப்பட்டு பாடசாலை வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்கள்


இதனை தொடர்ந்து கற்றல் நடவடிக்கைகள் வழமைபோன்று ஆரம்பமாகியுள்ளது குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் இரண்டு கல்வி வலயங்கள் காணப்படுகின்றன அதன் அடிப்படையிலே துணுக்காய் கல்வி வலயத்தில் மொத்தமாக 61 பாடசாலைகள் காணப்படுகின்றன அதிலே ஆரம்ப பாடசாலைகள் 25 இன்று ஆரம்பிக்கப்படவில்லை ஏனைய 36 பாடசாலைகள் உடைய கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இன்று ஆரம்பமாகியுள்ளது
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 60பாடசாலைகள் இருக்கின்றன 24 ஆரம்ப பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கப்படவில்லை ஏனைய36 பாடசாலைகள் உடைய கற்றல் செயற்பாடுகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது
அத்தோடு முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் இராணுவ போலீஸ் காவலரண்கள் அமைக்கப்பட்டு சோதனைச்சாவடிகளில் வழமைபோன்று சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது