Designed by Iniyas LTD
யாழ் இளவாலையில் வாள் வெட்டுக் குழு அட்டகாசம்…
யாழ்ப்பாணம், இளவாலை கவுணாவத்தை ஆலயத்துக்கு அருகிலுள்ள வீட்டினுள் ஆறுபேர் கொண்ட கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
வாள் மற்றும் கொட்டன்களுடன் மூன்று உந்துருளிகளில் 6பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அச்சத்தால் வெளியில் வரவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டுக் கண்ணாடிகளை உடைத்து, பொருள்களைச் சேதப்படுத்தி அட்டகாசம் புரிந்த கும்பல் வீட்டிலிருந்த உந்துருளிளையும் எடுத்துச் சென்றுள்ளது.
இதேவேளை குறித்த கும்பல் வீதியில் செல்லும் போது பொதுமகன் ஒருவருக்கு வாளால் வெட்டியுள்ளனர்.
காயமடைந்த இளைஞன், தெல்லிப்பழை மருத்துவமனையில் அனுமதிக்கபப்ட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கபடுகின்றது.