Designed by Iniyas LTD
யாழ்.மாநகர முதல்வாருக்கு கொலை மிரட்டல்??…
யாழ்.மாநகர முதல்வா் இமானுவேல் ஆனால்ட்டுக்கு தொலைபேசி ஊடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸ் தலமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கம்பன் விழாவுக்குச் செல்லவேண்டாம் எனவும் தமது எச்சரிக்கையை மீறிச் சென்றால் அங்கு வைத்துக் கொலை செய்வோம் என்றும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் மாநகர முதல்வா் தெரிவித்துள்ளார்.
கடந்த 15ஆம் தனது அலைபேசிக்கு அழைப்பு எடுத்த நபர், இந்தக் கொலை மிரட்டலை விடுத்ததாகவும் அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுசெய்துள்ளார்.
தனக்கு அழைப்பு எடுத்த தொலைபேசி இலக்கத்தையும் அவர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தக் கொலைமிரட்டல் தொடர்பாக வடக்கு மாகாண மூத்த பொலிஸ் மா அதிபருக்கு முதல்வர் இ.ஆனல்ட் அறிவித்ததை அடுத்து , பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே அவர் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.