Designed by Iniyas LTD
வாகன விபத்தில் ஏழு ஸ்ரீலங்கா போலீசார் படுகாயம்!
காலி – பத்தேகம வீதியின் உலுவிட்டகே பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடந்த வாகன விபத்தில் 7 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பயணித்த ஜீப் வண்டி வீதியை விட்டு விலகி தொலைபேசி கம்பம் மற்றும் மதில் சுவரில் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.
போத்தல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர்களே சம்பவத்தில் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 6 பேர் பெண் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.