தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருக்கேதீஸ்வரம் ஆலய விடயத்தில் சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும் கைது செய்ய உத்தரவு…

திருக்கேதீஸ்வரம் ஆலய விடயத்தில்  சம்பவ இடத்தில் நின்றிருந்த சகலரையும் கைது செய்யுமாறு மன்னாா் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய சுற்றாடலில்  கடந்த சிவராத்திாி தினத்திற்கு முதல் நாள் அங்கு   இருந்த அலங்கார வளைவு  சில மத வெறியா்களால்  அடித்து நொருக்கப்பட்டது.

இந்த விட யம் தொடா்பாக அமைச்சா் மனோகணேசனின் வழிநடத்திலில், மன்னாா் நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த  வழக்கு இன்று நீதி மன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது  திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் சாா்பில் ஆஜரான சட்டத்தரணி பாரம்பாியமாக அந்த பகுதியில் இருந்த வளைவு அகற்றப்பட்டமையானது, மத குரோதத்தை துண்டும் செயல் என சுட்டிக்காட்டியிருந்தார்.

இதனையடுத்து  சம்பவம் இடம்பெற்ற போது ஊடகங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் அனைத்தையும் சான்றாக எடுத்துக் கொ ண்டு  அங்கிருந்த சகலரையும் கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Comments
Loading...