Designed by Iniyas LTD
யாழ் பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய தலைவா், மற்றும் செயலாளா் கைது …

யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவருடைய புகைப்படங்கள் , தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்துக்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தின் தலைவா், மற்றும் செயலாளா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
யாழ்.பல்கலைக்கழகம் மற்றும் யாழ்.பல்கலைக்கழக மாணவா் விடுதி இன்று காலை சுற்றிவளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது மாணவா் ஒன்றிய கட்டிடம் மற்றும் மாணவா் விடுதி ஆகியவற்றுக்குள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவா் பிரபாகரன் மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் படங்கள் மற்றும் சினைப்பா் துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தொலைநோக்கி மற்றும் இராணுவம் பயன்படுத்தும் சப்பாத்து ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக இராணுவதினர் கூறியுள்ளனர்.
எனினும் இராணுவத்தால் மீட்கப்பட்ட ஜொனி மிதிவெடி மற்றும் கிளைமோர் என்பன போலியானவை என பொலிசார் தெரிவித்ததோடு, குறித்த பொருட்கள் கண்காட்சிக்காக தயாரிக்கப்பட்டிருக்கலாமெனவும் தெரிவித்துள்ளனர்.
அதோடு அவற்றை குண்டுசெயலிழக்க வைக்கும் பிரிவினர் ஆய்வு செய்தபோது, அவை போலியானவை என்பது தெரிய வந்துள்ளது.
இதேவேளை எதிர்வரும் 6ம் திகதி பல்கலைக்கழக செயற்பாடு ஆரம்பமாகவுள்ள நிலையில், பல்கலைகழக நிர்வாகத்தின் வேண்டுகோளின் பேரிலேயே இந்த சுற்றிவளைப்பு தேடுதல் நடந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கைதுசெய்யப்பட்டுள்ளா பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் எம்.திவாகரன், செயலாளர் எஸ்.கபில்ராஜ் ஆகிய இருவரையும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணை செய்ய, பாதுகாப்பு அமைச்சிடம் கோப்பாய் பொலிசார் விண்ணப்பித்துள்ளதாகவும் அறியக்கிடைத்துள்ளது.
விடுதலைப்புலிகளின் தலைவர், மற்றும் மாவீரர்களின் படங்கள், தமிழீழ வரைபடம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.