தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விமானத்தில் கடத்த முயன்ற அரியவகை ஆயிரத்து 500 ஆமைகள் பறிமுதல் …..

பிலிப்பைன்ஸ் நாட்டில் விமானத்தில் கடத்த முயன்ற அரியவகையைச் சேர்ந்த ஆயிரத்து 500 ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் கேட்பாரற்றுக் கிடந்த 4 பெட்டிகளை கைப்பற்றி சோதனை நடத்தியுள்ளனர்,

இதன்போது அதில் நட்சத்திர ஆமை, செங்கால் ஆமை போன்ற ஆயிரத்து 500 அரியவகை ஆமைகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ஆமைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனைக் கடத்த முயன்றவர்களைத் தேடி வருகின்றனர்.

Comments
Loading...