Designed by Iniyas LTD
விலங்குகள் ஆய்வுக்காக சென்ற ஹெலிகாப்டர் விபத்து- ஐவர் பலி…
வடமேற்கு பகுதியில் உள்ள டர்கானா என்ற இடத்தில் இருந்து மத்திய தீவுப் பகுதியில் உள்ள தேசியப் பூங்காவுக்கு விலங்குகள் ஆய்வுக்காக சில அமெரிக்கர்கள் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துகுள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் கென்ய நாட்டு விமானி மற்றும் 4 அமெரிக்கர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் குறித்த விபத்தில் அமெரிக்கர்களின் உயிரிழப்பை கென்யாவுக்கான அமெரிக்க தூதரகமும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
