தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் சாதனை படைத்த அயர்லாந்தின் டிம் முர்டாஃக்..

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ஆவது வீரராக களமிறங்கி இரு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் குவித்து, அயர்லாந்து கிரிக்கெட் வீரர் சாதனை புரிந்துள்ளார்.

உத்தரகாண்ட் தலைநகர் டேராடூனில் ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 11ஆவது வீரராகக் களமிறங்கிய அயர்லாந்தின் டிம் முர்டாஃக், முதல் இன்னிங்சில் 54 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 27 ரன்களும் எடுத்தார்.

இதேவேளை  142 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 11ஆவதாக களமிறங்கிய ஒரு வீரர் இரு இன்னிங்சிலும் 25 ரன்களுக்கு மேல் குவித்ததில்லை.

தற்போது இந்த வரலாற்றுச் சாதனையை அயர்லாந்து அணி வீரர் டிம் முர்டாக் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...