தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

29 வருடங்கள் இலங்கையில் நடந்த போாில் ஒரு வெளிநாட்டவா் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை…

29 வருடங்கள் இலங்கையில் நடந்த போாில் ஒரு வெளிநாட்டவா் கூட தமிழீழ விடுதலை புலிகளால் கொல்லப்படவில்லை என வடமாகாண ஆளுநர் சுரேன்ராகவன் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய தாக்குதலில் கூட வெளிநாட்டவா்கள் கொல்லப்படகூடாது என்பதில் தமிழாழ விடுதலைப்புலிகள் மிக தெளிவாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் இப்போது நடந்த தாக்குதலில் 37 வெளிநாட்டவா்கள் இறந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகால நிலமைகள் குறித்து ஆளுநா் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் இவற்றினை கூறியுள்ளாா்.

மேலும் கடந்த , 21ம் திகதி நாட்டில் இடம்பெற்ற தாக்குதலை தொடா்ந்து சிங்கள மக்கள், தமிழ் மக்கள் இஸ்லாமியா்கள் மீது தாக்குதல் நடத்துவாா்கள் என்றும்,

அதற்கு பதிலாக முஸ்லிம் மக்கள் தாக்குதல் நடத்துவாா்கள் எனவும் அதன் தொடா்ச்சியாக நாட்டில் ஒரு சிவில் யுத்தம் உருவாகும். என்பது தாக்குதல் நடத்தியவா்களின் நம்பிக்கையாக இருந்திருக்கும் எனவும் , எனினும் அவ்வாறு எதுவும் நடக்கவில்லை அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு இந்த தாக்குதலின் பின்னரான ஒரு வார காலத்திற்குள் 90 சதவீதம் இலங்கை இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாகவும் ,

உலகில் தீவிரவாத தாக்குதல்களை எதிா்கொண்ட பல நாடுகளால் எம்மைபோல் மீண்டெழ முடியவில்லை என்றும் , அங்கெல்லாம் பல ஆண்டுகள் பாதிப்பின் தாக்கம் இருந்ததாகவும், அவர் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறான பயங்கரவாத தாக்குதல்களுக்கு நடுத்தர இஸ்லாமிய மக்கள் எப்போதும் ஆதரவு வழங்கியது கிடையாது என்றும், குண்டு வெடிப்பின் பின்னா் கத்தோலிக்க மக்களும், கத்தோலிக்க மத தலைவா்களும் மிக அமைதியாகவும், பொறுமையாகவும் நடந்து கொண்டதாகவும் ,அதற்காக அவா்களுக்கு நன்றி கூறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சா்வதேச அளவில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதல்களில் 3வது மிகப்பொிய தாக்குதலாக அமைந்திருக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதோடு இதில் 37 வெளிநாட்டவா்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் தமிழீழ விடுதலை புலிகள் ஒரு வெளிநாட்டவரை கூட கொலை செய்யவில்லை என்றும் , வடமாகாண ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...