Designed by Iniyas LTD
153 ஆண்டுகள் பழமைவாய்ந்த பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல் திட்டம் நாடு தழுவியரீதியில்…
153 ஆண்டுகள் பழமைவாய்ந்த பதிவாளர் நாயக திணைக்களத்தின் சேவைகளை நவீனமயப்படுத்தல் திட்டம் நாடு தழுவியரீதியில் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்திருமதி ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் காணிகள் பதிவுசெய்தல் ஒருநாள் சேவை மற்றும் தேசிய பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
நிகழ்வில் அமைச்சர் றிசாட் பதியூதின் சார்பாக மாந்தை கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தயாநந்தன் மற்றும் ஜக்கியதேசிய கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் றிசாம் ஜமால்தீன்,கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.தவராசா மற்றும் சட்டத்தரணி ரி.கெங்காதரன் மற்றும் சட்டவாளர்கள் மாவட்ட செயலக அதிகாரிகள் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார்கள்.
காணிபதிவு தொடர்பான பதிவினை மாவட்ட காணிபதிவு அலுவலகத்தில் சட்டத்தரணி ரி.கெங்காதரன் அவர்கள் பத்திரத்தினை கொடுத்து பதிவினை தொடக்கிவைத்துள்ளதை தொடர்ந்து அதன் நினைவாக மாவட்ட செயலக வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டிவைக்கப்பட்டுள்ளது.











