தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இஸ்லாமிய தீவிரவாதத்தின் பரவலை நாட்டில் முற்றாக இல்லாமல் செய்வேன் – கோத்தபாய ..

ஜனாதிபதி தேர்தலில் தான் தெரிவாகும் பட்சத்தில் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பரவலை நாட்டில் முற்றாக இல்லாமல் செய்ய போவதாக கோத்தபாய ராஜபக்க்ஷ கூறியுள்ளார்.

ரொய்ட்டர் செய்திசேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை இதனை தெரிவித்துள்ளார்.

இராணுவ புலனாய்வு கட்டமைப்பே மீள கட்டி எழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதத்தின் பரவலை இல்லாமல் செய்யப்போவதாகவும் கோத்தபாய ராஜபக்ஸ கூறியுள்ளார்.

மேலும் தான் கட்டியெழுப்பிய இராணுவ புலனாய்வு கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு பொறிமுறைகளை அரசாங்கம் குலைக்காமல் விட்டிருந்தால் நாட்டுக்கு இன்று இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது எனவும் கோத்தபாய ராஜபக்ஸ இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...