தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பொலிவியாவில் கால்பந்து விளையாட்டின் போது 32 வயது நடுவர் மாரடைப்பால் மரணம்..

பொலிவியாவில் கால்பந்து விளையாட்டின் போது நடுவர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மைதானத்திலேயே உயிரிழந்துள்ளார்.

எல் அட்லா என்ற இடத்தில் உள்ளுர் அணிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் இடம்பெற்றது

போட்டிகளுக்கு 32 வயது நிரம்பிய விக்டர் ஹ்யூகோ ((Víctor Hugo)) என்பவர் நடுவராகச் செயல்பட்டுக் கொண்டிருந்தார்.

ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்று கொண்டிருந்த நேரத்தில் விக்டர் திடீரென மைதானத்தின் நடுவில் மயங்கிச் சரிந்தார்.

இதையடுத்து அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

Comments
Loading...