தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கேப்பாபுலவு படைமுகாமிற்குள் புகுந்த முதலைகள்!

முல்லைத்தீவு கேப்பாபுலவு படைமுகாமிற்குள் இருந்து இரண்டு முதலைகளை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் பிடித்துள்ளார்கள்.

கேப்பாபுலவு படைத்தலைமையக காணிக்குள் இரண்டு பாரிய முதலைகள் அங்கு நின்ற இரண்டு மாடுகளை பிடித்து உண்டுள்ளது.

இது குறித்து படையினரால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்

23.05.19 அன்று படைதலைமையகத்திற்குள் சென்ற வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த இரண்டு முதலைகளையும் பிடித்துள்ளார்கள்

12.5 அடி நீளம் கொண்டது 9அடி  நீளம் கொண்ட இரண்டு முதலைகள் நந்திக்கடல் ஏரியில் நின்றுள்ளன கடும் வெப்பம் காரணமாக இவை தரையினை நேக்கி வந்த வேளை படையினரின் முகாமிற்குள் புகுந்துள்ளன அங்கு நின்ற இரண்டு மாடுகளை இவை பிடித்து சாப்பிட்டுள்ளதாக படையினர் தெரிவித்துள்ளார்கள்.

குறித்த முதலைகளை பிடித்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வவுனிக்குளம் முதலைகள் சரணாலையத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்கள்

Comments
Loading...