Designed by Iniyas LTD
மாகாண சபை தேர்தலில், வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனைத்து கட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்துள்ளது பெப்ரல் அமைப்பு
எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், வாக்களிக்கும் முறைமை குறித்து கலந்துரையாடல்களை மேற்கொள்ள அனைத்து கட்சி மாநாடு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகவலை பெப்ரல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ரோஹன ஹெட்டியாராட்சி இதனை தெரிவித்துள்ளார்
குறித்த மாநாடு பெப்ரல் அமைப்பினால் எதிர்வரும் 25 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இந்த மாநாட்டில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.